நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சியை எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தவறியுள்ளதால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களது வாக்களிப்பின் மூலம் தவிசாளர் தெரிவு இடம் பெற்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி தலைமையில் இன்று அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தவிசாளர் தெரிவு இடம் பெற்றது.
இதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் வாக்களிப்பின் மூலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 18 உறுப்பினர்கள் இருக்கத்தக்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எட்டு உறுப்பினர்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நான்கு உறுப்பினர்களையும் தேசிய மக்கள் சக்தி மூன்று உறுப்பினர்களையும் தேசிய காங்கிரஸ் இரண்டு உறுப்பினர்களையும். ஐக்கிய மக்கள் சக்தி ஒரு உறுப்பினரையும் பெற்றுக் கொண்டன.
இந்த அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியன இணைந்து முறையே தவிசாளர் பிரதித் தவிசாளர் பதவிகளை பகிர்ந்து கொண்டனர்.