மு.கா.ஆதரவுடன் புதிய தவிசாளராக ஏ. அஸ்பர் ஜே பி தெரிவு....!!


நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் 

தெரிவில் தாஹிர் எம்.பியின் ஆதரவு உறுப்பினர் படுதோல்வி...!!


மு.கா.ஆதரவுடன் புதிய தவிசாளராக ஏ. அஸ்பர் ஜே பி தெரிவு....!!


– முன்ஸிப் அஹமட் –


நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அந்த சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ. அஸ்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை, அந்த சபையின் உப தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஐ. இர்பான் தெரிவானார்.


இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் இருவர் – தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டனர். வேறு எவரும் போட்டியிடவில்லை.


அதன்படி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த ஏ. அஸ்பர் மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி றியாஸ் ஆதம் ஆகியோர் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டனர்.


13 ஆசனங்களைக் கொண்ட நிந்தவூர் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 06 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் 04 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி 02 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 01 உறுப்பினரையும் பெற்றுள்ளன.


புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களைத் தெரிவு செய்வதற்கான கூட்டம், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இன்று (02) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.


இதன்போது தவிசாளரைத் தெரிவு செய்யும் பொருட்டு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. உப தவிசாளர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.


இந்த வாக்கெடுப்புகளில் தேசிய மக்கள் சக்தி கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது.


நிந்தவூரை சொந்த இடமாகக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. தாஹிர் – நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் என்பவரைத் தெரிவு செய்வதற்குத் தீர்மானித்திருந்ததாகவும், ஆனால், அவரையும் மீறி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அஸ்பர் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.


அஸ்பரைத் தவிசாளராகத் தெரிவு செய்யும் ரகசிய வாக்கெடுப்பில் தாங்கள் அஸ்பருக்கு ஆதரவளித்ததாக, நிந்தவூர் பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அன்சார் தெரிவித்துள்ளார்.


தெரிவுசெய்யப்பட்ட அனைவருக்கும் எமது சிலோன்கியூகே ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்களும், கட்சி வேறுபாடுகளை களைந்து நமது ஊர், நமது பிரதேசம், நமது மக்கள், நமது அபிவிருத்தி என்ற குறிக்கோளுடன் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்......

 



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்