காட்டப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அவ்வாறானதொரு விடயத்துக்கு தயவுதாட்சணயமின்றி நடவடிக்கை எடுக்குமாறு பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க கோரினார். ஆவ்வாறான முறைப்பாடுகள் கிடைத்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் இதன்போது உறுதியளித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க, இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், பிரதியமைச்சருமான பிரதீப் சுந்தரலிங்கம், ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் ஆகியோரும், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் க.பிரட்லி ஜெனட், வடக்கின் அனைத்து வலயங்களினதும் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.