உயர் நீதிமன்றத்தின் புதிய பிரமத நீதியரசர் பதவிக்கு நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியலமைப்புப் பேரவைக்கு குறித்த பரிந்துரையை மேற்கொண்டுள்ளார்.
தற்போதைய பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ இம்மாதம் 25ஆம் திகதியுடன் 65 வயது பூர்த்தியாவதன் காரணமாக தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளவுள்ளார்.
பதவி வெற்றிடம்
அதன் காரணமாக ஏற்படவுள்ள பிரதம நீதியரசர் பதவி வெற்றிடத்துக்கே நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன நியமிக்கப்படவுள்ளார்.