காலிமுகத்திடலில் நடைபெற்ற கோட்டாகோகம போராட்டத்தின் போது, தாம் பொலிஸாரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகக் கூறி சட்டத்தரணி நுவான் போபகே தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நியாயமான காரணமின்றி போபகே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் மூலம் அரசியலமைப்பின் கீழ் அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நீதியரசர்கள் குமுதுனி விக்ரமசிங்க, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
பிரதிவாதிகள்
அதன்படி, உயர்நீதிமன்றம் பெயரிடப்பட்ட பிரதிவாதிகளான பொலிஸ் மா அதிபர், இராணுவத் தளபதி மற்றும் கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட்டவர்களுக்கு அறிவித்தலை அனுப்பியுள்ளது.