பொத்துவில் முன்னாள் தவிசாளர் அப்துல்வாசித் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்



பொத்துவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் திரு அப்துல்வாசித் அவர்கள், ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்நியமனத்தை உறுதி செய்யும் வகையில், கட்சித் தலைமைக்கும் கட்சிக்கும் உரிய நிபந்தனைகளுக்கிணங்க சத்தியப் பத்திரம் ஒன்றை திரு அப்துல்வாசித் இன்று கையெழுத்திட்டார். அவருக்கான அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம், இன்று (28) நுவரெலியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள விடுதியில், கட்சி செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால்  வழங்கப்பட்டது.


இந்நியமனம், கட்சியின் உயர் மட்டத் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சித் தரப்பினர் தெரிவித்தனர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்