இரண்டு மாதங்களுக்குள் சிக்கிய பல பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள்

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாத்திரம், இலங்கைக்குள் கடல் வழிகளில் சுமார் 1758 கிலோ கிராம் ஹெரோய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை எடுத்து வர முயற்சிக்கப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி

இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி 23பில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 11 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரொய்ன் போதைப்பொருட்களும், 12 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருட்களும் அடங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேற்கொண்ட நான்கு தனித்தனி சோதனைகளில் இந்த பெரிய அளவிலான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதுடன் இந்த கடத்தல்கள் தொடர்பில் 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்