இஸ்ரேல் - ஈரான் யுத்தம்! மிக நீண்ட எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் இலங்கை மக்கள்


 முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் எரிபொருள்  நிரப்புவதற்காக பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் மிக நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் எரிபொருளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

எரிபொருளுக்கு பற்றாக்குறை

இந்தநிலையில் எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று அஞ்சி இலங்கை மக்கள் எரிபொருளினைப் பெற்று சேமித்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, நேற்றையதினம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப மக்கள் நீண்ட வரிசையில் குவிந்துள்ளனர். 

இதேவேளை, நேற்றையதினம் யாழ்ப்பாணத்திலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மிக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்துள்ளனர்




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்