ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை மீண்டும், முன்னாள் தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கையேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் கட்சியில்
மீண்டும் கட்சியை பொறுப்பேற்று கட்டியெழுப்புமாறு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் 1994 முதல் 2005 வரை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக, சிறிசேன பதவி வகித்த காலத்தில், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற சந்திரிகா உடன்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுள்ளது.