அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச மின்சார திருத்த சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளை உயர் நீதிமன்ற தீர்மானங்கள், பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் உட்பட ஏழு தரப்பினர் இந்த சட்டமூலத்தின் சில பிரிவுகளை சவாலுக்கு உட்படுத்தி மனுக்களை தாக்கல் செய்தன.
இம் மனுக்கள் மீதான விசாரணை ஏ.எச்.எம்.டி. நவாஸ், அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய 3 நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று (12) இடம்பெற்றது.
பாராளுமன்றக் குழுக் கட்டத்தில் இந்த மசோதாவில் திருத்தங்களை முன்மொழிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்