ஆளும் கட்சியை தோற்கடிக்க புறப்பட்டுள்ள எதிர்க்கட்சி கூட்டு


 ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைக் கொண்ட எதிர்க்கட்சிக் கூட்டணி, சில உள்ளூராட்சி மன்றங்களின் கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொள்தற்கு, பொதுவான ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஊடகங்களுக்கு நேற்று(12.06.2025) கூட்டு எதிர்க்கட்சி, இந்த முடிவை அறிவித்ததுள்ளது.

ஒத்துழைப்பு மூலம் உருவாக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான திட்டங்களையும், அந்த கூட்டணி கோடிட்டுக் காட்டியுள்ளது.

மக்களின் வாழ்வாதாரம்

கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் தலதா அதுகோரல, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் லசந்த அழகியவன்ன மற்றும் பொதுஜன பெரமுனவின் சாகர காரியவசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்றங்களின் கட்டுப்பாட்டைப் பெறுவதுடன் மட்டும், தங்கள் ஒத்துழைப்பு முடிவடையாது, தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து, தமது கூட்டு பணியாற்றும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்