காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தம் கோரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை அமெரிக்கா சற்றுநேரத்திற்கு முன் வீட்டோ (Veto) செய்துள்ளது. காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தம் கோரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்திற்கு 14 நாடுகள் தமது ஆதரவை வழங்கின.
அமெரிக்க அதிபருக்கு அண்மையில்தான் 3 நாடுகள் டிரில்லியன் கணக்கில் அள்ளி அள்ளி வழங்கியிருந்தன.
கடந்த 24 மணி (புதன்கிழமை) நேரத்தில் காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 95 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 440 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த பகுதியின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.