ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த முதியோர் பிரிவில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது.
இதில், சிக்கி 3 நோயாளிகள் உயிரிழந்துள்ளதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர்.
20 நிமிட போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் 72 வயது நோயாளி ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர்.