எரிபொருள் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்


 நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த திருத்தங்கள் அறிவிக்கப்படலாம்

எரிபொருள் விலை

கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளால் சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை தளம்பல் நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில், குறித்த விடயம் இலங்கையின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 மத்தியக் கிழக்கில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக  உலக சந்தையில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பிற்கான அச்சங்கள் ஏற்பட்டிருந்தன.

இதன் காரணமாக இலங்கையிலும் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்புக்கான வாய்ப்புக்கள் உள்ளன என கருதி பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் முகாமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்