எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சிகளுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்ட பொது ஆணையை அபகரிக்க எந்தவொரு முயற்சியும் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் தமது கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பதை நினைவூட்டுவதாகவும் கூறியுள்ளார்

பொது ஆணை

கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 60வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி 267 உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்க தேசிய மக்கள் சக்தி ஆணையைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் முதலில் 152 உள்ளூராட்சி மன்றங்களிலும், மீதமுள்ள 115 உள்ளூராட்சி மன்றங்களிலும் விரைவில் கட்டுப்பாட்டை நிறுவ தாம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சித்த அவர், ஆட்சி செய்வதற்கான ஆணையை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் பொது ஆணையை எதிர்த்து உருவாக்கப்படும் எந்தவொரு சபையும்; மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்