தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாக, ஜனாதிபதி அநுர மிரட்டுகிறார் - சுமந்திரன்!



 தங்களிடம் மூன்றிலிரண்டு (2/3 ) பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் என தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பதில்பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


மக்கள் விடுதலை முன்னணியின் 60 வருட நிறைவையொட்டி நேற்று புதன்கிழமை (14) விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றியிருந்தார்.

இந்த உரை குறித்து தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பதில்பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ள சுமந்திரன்,

“தங்களிடம் முன்றிலிரண்டு ( 2/3 ) பெரும்பான்மை இருப்பதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி மிரட்டுகிறார். “அதிகாரம் கெடுவிக்கும்; முழுமையான அதிகாரம் முற்றிலும் கெடுவிக்கும்.” யாழ்ப்பாண மாநகர சபையில் 10/41 பெரும்பான்மை என்று சொல்லும்போது அவரது கணிதத் தகைமை வெளிப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.


📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்