இலங்கையர்கள் சிகரட்டுக்காக ஒரு நாளில் செலவழிக்கும் தொகை


 சிகரெட்டுகளுக்காக, ஒரு நாளைக்கு 520 மில்லியன் ரூபாய்களை செலவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே 31இல் வரும், உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்த தகவல் வெளியாகியுள்ளது.

3.2 மில்லியன் மக்கள்

இந்தநிலையில், 2019 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, புகைபிடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளால் ஏற்பட்ட பொருளாதார செலவுகள் 214 பில்லியன் ரூபாய்களாகும் என்று, மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

2020 உலகளாவிய வயதுவந்தோர் புகையிலை கணக்கெடுப்பின்படி, இலங்கையில் தினமும் மொத்தம் 3.2 மில்லியன் மக்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர்

அகால மரணங்கள்

அத்துடன், இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 20,000 அகால மரணங்கள் ஏற்படுகின்றன

முறையான வரி வசூலிக்கும் வழிமுறைகள் இல்லாததால், 2024 ஆம் ஆண்டில் சிகரெட்டுகளிலிருந்து அரசுக்கான வரி வருவாய் 9.4 பில்லியன் ரூபாய்களால் குறைந்துள்ளது.

இதன் காரணமாக, இது, உற்பத்தியாளருக்கு இலாபமாக மாற்றப்பட்டுள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்