புதிய கோவிட் 19 திரிபால் நாட்டில் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை


 புதிய கோவிட் 19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில மருத்துவமனைகளில் பி.சி.ஆர். பரிசோதனையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள் தற்போது கோவிட் 19 நோயாளிகளைக் கண்டறிய அதிக அவதானத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சிகிச்சை பெறும் நோயாளிகள்

சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் காய்ச்சலால் அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்க மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும், ஆனால் உடனடியாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்