ஜூன் இரண்டாம் திகதிக்கு முன் முதலாவது அமர்வு
( ஏ.எல்.றமீஸ்)
அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் 12 வட்டாரங்களில் 11 வட்டாரங்களை வெற்றி கொண்டதன் மூலம் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது
அக்கரைப்பற்று மாநகர சபைக்கு 20 உறுப்பினர்கள் இருந்து வந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் வாக்குகள் தேசிய காங்கிரஸின் வாக்குகளை விட அதிகமாக உள்ள காரணத்தினால் இரண்டு மேலதிக ஆசனங்களை தேர்தல் ஆணைக்குழு வழங்கிய நிலையில் மொத்தமாக 22 ஆசனங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மொத்த ஆசனத்தில் 50 வீதம் அல்லது அதற்கு மேல் பெறும் கட்சி நேரடியாக ஆட்சியமைக்க முடியும்.
அந்த அடிப்படையில் 22 ஆசனங்களில் 11 ஆசனங்களை பெற்றதன் மூலம் 50 வீதத்தை எட்டியுள்ளது.
ஆட்சி அமைவதற்கு 50 வீதம் போதுமானதாக இருக்கும் நிலையில் பிரேரணைகள் நிறைவேற்றும் போது 51 வீதம் ( 12 ஆசனங்கள்) தேவைப்படும்.
இதற்கு ஏதுவாக பிரேரணைகள் மற்றும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்களை வாக்கெடுப்பிற்கு உட்படுத்தும் போது ஆதரவாகவும் எதிராகவும் சமமாக வாக்குகள் அளிக்கப்படும் போது மேயர் அல்லது தவிசாளர்களுக்கு மேலதிகமாக ஒரு வாக்கு வழங்கப்பட்டுள்ளது
அதனால் அக்கரைப்பற்று மாநகர சபையில் 11 வாக்குகளைக் கொண்ட தேசிய காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட்ட பின்னர் 12 பெரும்பான்மை வாக்குகளோடு புதிய மேயர் அதாஉல்லா யாருடைய தயவுமின்றி வீறுநடை போடுவார்