முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவ வழக்கு ஒத்திவைப்பு


 முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பு வீட்டின் முன்னாள் கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் ஜூன் 16ஆம் திகதிக்கு  ஒத்திவைத்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன்21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய பாலேந்திரன் என்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து மெய்பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்தனர்

வழக்கு விசாரணை

இதனை தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர் சார்பில் முன்னிலையாகிய  சட்டத்தரணிகளான ந.கமலதாஸ், வி.சுதர்ஷன் ஆகியோர் இந்த கொலை தொடர்பாக பொலிசார் உரிய விசாரணை நடாத்தப்படவில்லை என தொடர்ந்து ஆட்சேபித்து வந்ததுடன் உயிரிழந்தவரின் பெற்றோரும் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்துனர்.

இந்த நிலையில் குறித்த விசாரணையை கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில் அமைச்சரின் வாகன சாரதியான தம்பான் என்றழைக்கப்படும் தனுசன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கொலை குற்றத்தின் அடிப்படையில் வெளிநாடு செல்ல இருந்து நிலையில் ஜனவரி 3ம் திகதி கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒத்திவைப்பு

இந்த நிலையில் குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் அவரது சாரதி முன்னிலையாகிய நிலையில் நீதவான் அடுத்த வழக்கு எதிர்வரும் ஜூன் 16 ம் திகதி என திகதியிடப்பட்டு அடுத்த வழக்கு நீதின்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்