பிரத்யேக இணையக் குற்றப் பிரிவை நிறுவியுள்ள இலங்கை பொலிஸ்

 

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கிய நாட்டின் விரைவான மாற்றத்துக்கு மத்தியில், இணையக் குற்றங்களின் கூர்மையான அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக, இலங்கை பொலிஸ், ஒரு பிரத்யேக இணையக் குற்றப் பிரிவை நிறுவியுள்ளது.

சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, இந்த முயற்சியை அறிவித்துள்ளார்.

நாட்டின் விரிவடைந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்துடன் அதிகரித்து வரும் தரவு மீறல்கள் மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு இணைய (சைபர்) அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதில் இந்த பிரிவு கவனம் செலுத்தும்

சட்ட நடவடிக்கைகளில் ஆதிக்கம்

அதிக பரிவர்த்தனைகள் இப்போது இணையத்தில் நடைபெறுவதால், இணையக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். 

அதே நேரத்தில் சைபர் குற்ற வழக்குகளே, எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார். 




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்