இந்தத் தீர்மானம் தொடர்பான சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தச் சுற்றறிக்கையின்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை இரண்டாக மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய மேலதிக வாகனங்களை உடனடியாக ஜனாதிபதி செயலகத்துக்கு ஒப்படைக்குமாறு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அத்துடன் மாதாந்த எரிபொருள் கொடுப்பனை 900 லீட்டருக்கு கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக் கொடுப்பனவு 2,250 லீட்டராக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.