ஜனாதிபதியின் மகளிர் தின செய்தி
கடந்த காலங்களில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்காக நாட்டில் பல கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் நடத்தப்பட்டிருந்தாலும், மேடைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அந்த கலந்துரையாடல்கள், பூமியில் ஒரு யதார்த்தமாக விதைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது எனவும் அந்த மகத்தான பணிக்காக ஒரு அரசாங்கமென்ற வகையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை, கடந்த குறுகிய காலத்தில் இலங்கைப் பெண்களுக்குப் பல வெற்றிகளை அடையத் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளமையை நினைவூட்ட விரும்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பல தசாப்தங்களாக கலந்துரையாடலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம், பங்கேற்பு மற்றும் வகிபாகத்தை அதிகரித்து, கடந்த பொதுத் தேர்தலில் 22 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிவித்துள்ளார்