சம்மாந்துறை , நாவிதன்வெளி , இறக்காமம் பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான



சம்மாந்துறை , நாவிதன்வெளி , இறக்காமம் பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செலுத்தியது.

2025 இல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை , நாவிதன்வெளி , இறக்காமம் பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்காக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களினால் இன்று (12) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச மத்திய குழு செயலாளர் அஸாறுடீன் சலீம் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச மத்திய குழு உறுப்பினர் கே.ஆர்.எம்.ரிசாட் ஆகியோர் பங்குபற்றினர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்