உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு...!!!
அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சுமார் 700 குடும்பங்களுக்கு 25 ஆயிரம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் (11) வழங்கி வைக்கப்பட்டது.
கேப்சோ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட்டின் அழைப்பின் பெயரில் கட்டார் சரிட்டி நிறுவனத்தின் அனுசரணையில் இரண்டாம் கட்ட உலர் உணவுப் பொருட்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்)