பாடசாலை சிறுமிகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

 நாட்டில் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமிகள் கருவுறும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயமானது பொலிஸ் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அத்துமீறல் தொடர்பான விசாரணைப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் உள்ள தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் 167 பாடசாலை வயது சிறுமிகள் கருவுற்றதாகவும் 2024 ஆம் ஆண்டில் இவ்வாறான 213 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வழக்கு

2024 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணி சிறுமிகள் மத்தியில் 10 வயது சிறுமியொருவர் உள்ளடங்கியிருந்ததாகச் சிறுவர் மற்றும் மகளிர் அத்துமீறல் விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் படி, 18 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இந்தநிலையில் ,தகாதமுறைக்கு உள்ளாகின்ற சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.





📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்