2006 இல் கல்முனை மாநகர சபைக்கான முஸ்லிம் காங்கிரசின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தது. சுயற்சை குழு மூலமாக அந்த தேர்தலை மு.கா வெற்றி கொண்டது.
அதுபோல் இந்த தேர்தலிலும் ஏராளமான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதானது கவலையான விடயமாகும். இது சிறுசிறு தவறுகளினால் ஏற்படுகின்றது. உள்ளுராட்சிமன்ற தேர்தல்களிலேயே அதிகமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவது வழமை.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு இரண்டு பட்டிய வழங்குதல், அதில் பெண்கள், இளைஞர்களின் விகிதாசாரம், வேட்பாளர் பட்டியலில் வேட்பாளர்களை தீர்மானித்து இறுதி முடிவு எடுப்பதில் உள்ள பாரிய நெருக்கடிகள், கட்சி உறுப்பினர்களின் உள்ளக அழுத்தங்கள், அதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் ஆவணங்களை சரிபார்ப்பதில் உள்ள கவனயீனம் போன்ற காரணங்களினால் வேட்பாளர் பட்டியல் நிராகரிக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையை உணர்ந்துதான் சில கட்சிகள் தங்களுக்கு சார்பாக சுயற்சை குழுக்களை நியமிக்கின்றனர். தற்போது சுயற்சை குழுக்கள் நியமிப்பதற்கு கட்டுப்பணம் அதிகம் என்பதனால் சிலர் அதில் ஆர்வம் காண்பிப்பதில்லை.
எனவேதான் எதிர்காலங்களில் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுக்களை கல்வியாளர்களைக் கொண்டு சரிபார்த்தபின்பு சமர்பிப்பது சிறந்தது.
முகம்மத் இக்பால்