தையிட்டி விகாரை தொடர்பில் பிமல் ரத்னாயக்கவை சந்தித்த காணிக்கான மக்கள் உரிமை இயக்கம்


 காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கம் பெளத்த சாசன அமைச்சர் பிமல் ரத்னாயக்கவை  சந்தித்துள்ளனர்.

நேற்றைய தினம் (20) மாலை 2.00 மணிக்கு பத்தரமுல்லையில் அமைந்துள்ள பௌத்த சாசன அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவை(Bimal Rathnayake) சந்தித்து தையிட்டி மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

தையிட்டி விகாரை

தையிட்டி திஸ்ச விகாரை அமைந்துள்ள மக்களின் காணிக்கான உரிமை பத்திரங்கள் காண்பிக்கப்பட்டதுடன் இது அவர்களுடைய பூர்விக வாழ்விடம் என்பதனையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

காணி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் குறித்த காணியை விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் காணி உரிமைக்கான மக்கள் அமைப்பை சேர்ந்த பிரியங்கரகொஸ்தா, நட்டாஷா, காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் வடமாகாண தலைவர் இ.முரளிதரன், யாழ்மாவட்ட உறுப்பினரும், தையிட்டி காணி உரிமையாளருமான சாருஜன் உட்பட 6காணி உரிமையாளர்கள், யாழ்பல்கலைகழக பேராசிரியர் திருவரங்கன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்