சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்னார்?

 

சேஸிங்' ரகசியம் இதுதான்! விராட் கோலி என்ன சொன்ன

ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரன் எடுப்பது பற்றி விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால் தன்னுடைய சிறந்த பேட்டிங் போட்டியாளரான விராட் கோலியை புகழ்வதில் அவர் தாமதிக்கவில்லை.
துபையில் செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் விராட் கோலி இந்திய அணி வெற்றி இலக்கை எட்டும் வரை களத்தில் இல்லாது போயிருக்கலாம். ஆனால், இந்தியா மீண்டும் ஒரு முறை சிறந்த சேஸிங் மூலம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

"இலக்கை வெற்றிகரமாக துரத்திப் பிடிக்கும் பேட்டர்களில் சிறந்தவர் யார் என்று விவாதித்தால், அது அவர் தான்" என கோலி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

ஆனால் இதில் விவாதத்திற்கே இடமில்லை. புள்ளிவிவரமே, கோலியே இதில் தலைசிறந்தவர் என்பதைக் காட்டுகிறது.


கோலி ஒரு நாள் போட்டி வரலாற்றில் தலைசிறந்த சேஸரா?

கோலி ஒரு நாள் போட்டி வரலாற்றில் தலைசிறந்த சேஸரா? என்ற கேள்விக்கு எளிமையான பதில் "ஆம்".

இந்திய அணிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் 84 ரன்கள் குவித்தார் கோலி. சர்வதேச போட்டிகளில் சேஸிங்கில் அவரது சராசரி 64.50. இது இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க பேட்டர் ஏ.பி. டி வில்லியர்ஸைக் காட்டிலும் 8 ரன்கள் அதிகம்.

ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்துள்ள 51 சதங்களில் 28 சதங்கள் சேஸிங்கின் போது வந்தவை. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரை விட கோலி 11 சதங்கள் அதிகம் அடித்துள்ளார்.

இந்தியா சேஸிங்கில் வெற்றியடைந்த போட்டிகளில் விராட் கோலியின் சராசரி 89.50 என மிகப்பெரியதாக உள்ளது. அவர் மீண்டும் மீண்டும் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தருகிறார்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்