வாழ்க்கையும்
விளையாட்டு மைதானம் தான்...
அதில் ,நானும்
கைப்பந்து தான்
உங்கள் பலம் கொண்ட
அளவுக்கு அடிக்கலாம்
அடிக்க அடிக்க
மேலே செல்லும் கைப்பந்து நான்.!
நானும் கால் பந்து தான்
உங்கள் பலம் கொண்ட
அளவுக்கு உதைக்கலாம்
உதைக்க உதைக்க விரைந்து
செல்லும் கால்பந்து நான்.!
என்னை நின்று விடாமல்
பார்த்துக் கொண்ட
உங்கள் முயற்சிக்கு என்
அன்பார்ந்த நன்றி..!
செல்வம் பெரியசாமி
