கல்லோயா ஆற்றுப் பிரிவின் யல போகத்திற்கான(சிறுபோகம்) ஆரம்ப கூட்டம்...!!!




(சர்ஜுன் லாபீர்)

கல்லோயா ஆற்றுப் பிரிவின் யலபோக(சிறுபோகம்) நெற் செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான ஆரம்ப விவசாய குழு கூட்டம் இன்று(19) திகதி சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் வழிகாட்டலின் கீழ் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபயேவிக்ரம தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் சிறுபோகத்திற்கான விதைப்புகாலம்,நிர்விநியோகம்,பயிர்காப்புறுதி, விதைக்கும் நெல்லினம்,மாடுகளை அப்புறப்படுத்தல்,கிளை வாய்க்கால் துப்பரவு,போன்ற விடயங்களுக்கான கால அட்டவணையும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இக் கூட்டத்தில் கல்முனை நீர்பாசன திணைக்கள பிரிவில் 13263 ஏக்கர் காணிகளும்
அக்கரைப்பற்று நீர்பாசன காரியாலயத்தில் வீரயடி பிரிவில் 4558 ஏக்கர் காணிகளும், சம்மாந்துறை நீர்பாசன திணைக்கள பிரிவில் 22218 ஏக்கர் காணிகளும் இம்முறை சிறுபோக விவசாய செய்கைக்காக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பி.டி.எம் இர்பான்,இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம் ரஸ்ஸான்(நளிமி) ,நீர்ப்பாசன திணைக்கள மாவட்ட பணிப்பாளர் மற்றும் பொறியிலாளர்கள்,கமநல திணைக்கள உயர் அதிகாரிகள், விவசாயத் திணைக்கள உயர் அதிகாரிகள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்,உரக் கூட்டுத்தாபன அதிகாரிகள்,நெல் ஆராய்ச்சி திணைக்கள உயர் அதிகாரிகள் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள்
ஒருங்கிணைந்த விவசாய அமைப்பின் தலைவர், அதன் பிரதிநிதிகள்,விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்