முந்தைய அரசாங்கங்களின் காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்ட ஏற்பாடுகளுக்கான சட்டமூலம் ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு வரவுள்ளது.
"நாங்கள் இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளை நாளுக்கு நாள் நிறைவேற்றி வருகிறோம் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கையையும் எந்தவித சலசலப்பும் இல்லாமல் நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்." என்றார்.