![]() |
தென் கொரியாவில் காட்டுத்தீ பரவும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கைத் தொழிலாளர்களைக் கேட்டுக்கொள்வதாக கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. |
தற்போதைய சூழ்நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் பதிவாகவில்லை எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் தென் கொரியாவில் உள்ள இலங்கையர்கள் 2 735 2966, 2 735 2967 அல்லது 2 794 2968 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது