Manoj Bharathiraja: சமீபகாலமாக மாரடைப்பால் பிரபலங்கள் உயிரிழக்கும் செய்தி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு திடீரென இந்த மண்ணுலகை விட்டு பிரிந்த பிரபலங்களை இப்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முக்கியமான நபராக பார்க்கப்பட்டவர் டிபி கஜேந்திரன். இவருக்கு சிறுநீரகக் கோளாறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
கேவி ஆனந்த் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வந்த நிலையில் மாரடைப்பால் தனது 51வது வயதில் உயிரிழந்தார்.
சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக் மரணம் திடீரென ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பலனளிக்காமல் 59 வயதில் விவேக் உயிரிழந்தார்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி சிவராத்திரி திருவிழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பினார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அப்போது இவரது வயது 57 ஆகும்.