யுக்ரேனில் போர்நிறுத்தம் குறித்த யோசனையுடன் உடன்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
எனினும், அவர் பல கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளதால் போர்நிறுத்தத்தின் தன்மை குறித்து "கேள்விகள்" எழுந்துள்ளன.
அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, யுக்ரேன் இந்த வாரத் தொடக்கத்தில் ஒப்புக் கொண்ட 30 நாட்கள் போர்நிறுத்தத் திட்டம் பற்றி பேசும்போது, புதின் இந்த கருத்தை கூறியுள்ளார்.
போர் நிறுத்த திட்டம் குறித்து, புதின் கூறிய கருத்தை "சூழ்ச்சி" என்று விவரித்த யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு கேட்டுக்கொண்டார்
.இதற்கிடையில், ரஷ்யாவின் எண்ணெய், எரிவாயு மற்றும் வங்கித் துறைகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
வியாழன் அன்று மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய புதின், "இந்த யோசனை சரியானது. நாங்கள் அதை ஆதரிக்கிறோம், ஆனால் நாங்கள் விவாதிக்க வேண்டிய கேள்விகள் உள்ளன "என்று போர்நிறுத்தம் குறித்து கூறினார்.
போர்நிறுத்தம், "நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும். இந்த நெருக்கடியின் மூல காரணங்களை அகற்றவும் வேண்டும்" என புதின் தெரிவித்தார்.
மேலும், "யுக்ரேன் தரப்பு 30 நாள் போர் நிறுத்தத்தை எட்டுவது நல்லது. நாங்கள் அதற்கு ஆதரவாக இருக்கிறோம், ஆனால் அதில் சில நுணுக்கங்கள் உள்ளன" என்றும் புதின் தெரிவித்தார்.
இரு தரப்பும் கடுமையாக முரண்படும் விஷயங்களில் ஒன்று, மேற்கு ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பிராந்தியம்.
கடந்த ஆண்டு யுக்ரேன் அங்கு ராணுவ ஊடுருவலைத் தொடங்கி சில பகுதிகளை கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார்.
குர்ஸ்க் பிராந்தியத்தின் முழு கட்டுப்பாட்டையும் ரஷ்யா மீட்டுள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள யுக்ரைன் படைகள் "தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.
"அவர்கள் வெளியேற முயற்சிக்கிறார்கள், ஆனால் கட்டுப்பாடு எங்களிடம் உள்ளது. அவர்களின் ஆயுதங்கள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன."
"குர்ஸ்கில் யுக்ரேனியர்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று சரணடைவது அல்லது இறப்பது" என்றார்.மேலும், "யுக்ரேன் தரப்பு 30 நாள் போர் நிறுத்தத்தை எட்டுவது நல்லது. நாங்கள் அதற்கு ஆதரவாக இருக்கிறோம், ஆனால் அதில் சில நுணுக்கங்கள் உள்ளன" என்றும் புதின் தெரிவித்தார்.
இரு தரப்பும் கடுமையாக முரண்படும் விஷயங்களில் ஒன்று, மேற்கு ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பிராந்தியம்.
கடந்த ஆண்டு யுக்ரேன் அங்கு ராணுவ ஊடுருவலைத் தொடங்கி சில பகுதிகளை கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார்.
குர்ஸ்க் பிராந்தியத்தின் முழு கட்டுப்பாட்டையும் ரஷ்யா மீட்டுள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள யுக்ரைன் படைகள் "தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்" அவர் தெரிவித்துள்ளார்.
"அவர்கள் வெளியேற முயற்சிக்கிறார்கள், ஆனால் கட்டுப்பாடு எங்களிடம் உள்ளது. அவர்களின் ஆயுதங்கள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன."
"குர்ஸ்கில் யுக்ரேனியர்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று சரணடைவது அல்லது இறப்பது" என்றார்.