சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி படுக்கை விரிப்புக்கள் (Bed Sheet) வழங்கி வைப்பு
✒️றியாஸ் ஆதம்
ABS Smart Lanka நிறுவனத்தினால் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி படுக்கை விரிப்புக்கள் (Bed Sheet) வழங்கப்பட்டுள்ளது. குறித்த படுக்கை விரிப்புக்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (13) சாய்ந்தமருது வைத்தியசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எம்.ஐ.எம்.சதாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
குறித்த நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், சாய்ந்தமருது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் சனூஸ் காரியப்பர். ABS Smart Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ரப் அலி, வைத்தியசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதன்போது ABS Smart Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ரப் அலி குறித்த படுக்கை விரிப்புக்களை கையளித்தார்.
சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபையும், சுகாதார சேவை நண்பர்கள் குழுவும் ABS Smart Lanka நிறுவனத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த படுக்கை விரிப்புக்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.