ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?

 

ரூ.53 கோடி மதிப்பு, 98 கிலோ; ஐந்தே நிமிடங்களில் திருடப்பட்ட தங்கக் கழிவறை இருக்கை - எப்படி நடந்தது?



  • ஐந்தே நிமிடங்களில் பிரிட்டனில் உள்ள பிளெனம் அரண்மனையிலிருந்து 4.8 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 53 கோடி) மதிப்பிலான தங்க கழிவறை இருக்கை 5 நிமிடங்களில் திருடப்பட்டதாக வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது.

ஆக்ஸ்ஃபோர்ட்ஷைரில் உள்ள இந்த அரண்மனையில் உள்ள கலைப்பொருள் கண்காட்சியில் 2019 ஆம் ஆண்டு இந்த தங்க கழிவறை இருக்கை நிறுவப்பட்டது. இது தற்போது வரை முழுவதுமாக பயன்பாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

பிரிட்டனை சேர்ந்த 39 வயதான மைக்கேல் ஜோன்ஸ் இந்த குற்றச்செயலில் தனக்கு எந்த தொடர்பு இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதேபோல, விண்ட்சர் பகுதியை சேர்ந்த 36 வயதான ஃபிரெட் டோ என்பவரும் 41 வயதான போரா குச்சுக் என்பவரும், திருடப்பட்ட அந்த கழிவறை இருக்கையை இடம் மாற்றியதில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்தன

ஆக்ஸ்ஃபோர்ட் கிரௌன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், இந்த தங்க கழிப்பறை பிரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அது இன்னும் மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று இரண்டு வாகனங்களில் வந்த ஐந்து நபர்கள் அந்த அரண்மனையின் பூட்டிய வாயில்களை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். கையில் சுத்தியலுடன் இருந்த அந்த கும்பல் தான், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர் என்று வழக்கறிஞர் ஜூலியன் கிரிஸ்டோஃபர் கேசி நீதிமன்றத்தில் கூறினார்.

இதில் பயன்படுத்தப்பட்ட சுத்தியல் சம்பவ இடத்திலேயே இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு 17 மணிநேரத்துக்கு முன்பு அந்த கழிவறை இருக்கையின் புகைப்படம் எடுக்கப்பட்டது என்றும் அந்த புகைப்படத்தை எடுத்தது இந்த திருட்டு சம்பவத்தில் உளவு வேலை பார்த்த மைக்கேல் ஜோன்ஸ்தான் என்றும் வழக்கறிஞர் ஜூலியன் கிரிஸ்டோஃபர் தெரிவித்தார்.

இந்த மொத்த திருட்டு சம்பவமும் வெறும் ஐந்து நிமிடங்களில் நடந்து முடிந்ததாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த கலைப்பொருள் சிறிய தங்கத் துண்டுகளாக பிரித்து எடுக்கப்பட்டதால் அதை மீட்டெடுக்க முடியவில்லை,"என்று தெரிவித்தார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்