உடல் பருமன்: ஆபத்தான 'வில்லன்' சமையல் எண்ணெய் - ஒருநாளைக்கு எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?
முன்பெல்லாம் உடல் பருமன் என்பது மேற்கத்திய நாடுகளில் மட்டும்தான் பிரச்னையாக பார்க்கப்பட்டது, ஆனால் சமீப ஆண்டுகளாக இந்தியா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் பிரச்னையாக மாறியுள்ளது.
இதை எதிர்கொள்ளும் பொருட்டு, உடல் பருமனுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை முன்னெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற 'மான் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில், தாங்கள் எடுத்துக்கொள்ளும் எண்ணெயின் அளவை 10 சதவிகிதமாக குறைக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். உடல் பருமனை குறைப்பதில் அது முக்கியமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.
"ஆரோக்கியமான நாடாக மாறுவதற்கு நாம் உடல் பருமனை சமாளிக்க வேண்டும். அதிக உடல் எடை பல வித பிரச்னைகள் மற்றும் நோய்களுக்கு வழிவகுக்கிறது," என்றும் அந்நிகழ்ச்சியில் மோதி பேசினார்.