மத்திய கிழக்கில் ஏற்கனவே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் அதிநவீன F-15E Strike Eagle போர் விமானம் இன்று குவைத்தில் விழுந்து நொறுங்கியது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
இன்று மதியம் குவைத்தின் அல் ஜஹ்ரா (Al Jahra) பகுதிக்கு மேலே பறந்து கொண்டிருந்த அந்த ராட்சத விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தீப்பிழம்பாக வானிலிருந்து கீழே விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் உறைந்து போயினர்.
விமானம் தரையில் மோதுவதற்கு சில நொடிகள் முன்பே, அதிலிருந்த இரண்டு விமானிகளும் Ejection Seat மூலம் பாராசூட்டில் குதித்து உயிர் தப்பினர். அவர்கள் தற்போது காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மர்மம் நீடிப்பு - இது தொழில்நுட்பக் கோளாறா? அல்லது ஏவுகணைத் தாக்குதலா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரானின் அதிரடி கிளெய்ம் - "நாங்கள் தான் வீழ்த்தினோம்" என ஈரான் தரப்பு ஒரு பக்கம் கூற, அமெரிக்காவோ "விசாரணை நடக்கிறது" என மௌனம் காக்கிறது.
அமெரிக்காவின் மிக வலிமையான போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படும் F-15 விழுந்துள்ள விபத்து, சர்வதேச அரசியலில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
"வானில் தெரிந்த நெருப்புப் பந்து.. அடுத்த சில நொடிகளில் பலத்த சத்தம்!" - நேரில் பார்த்த குவைத் மக்களின் அதிர்ச்சிப் பேட்டி இப்போது வைரலாகிறது.
