அரச ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்டிருந்த 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்கள் அனைத்தும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அரச சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் 2026.01.01 முதல் 2026.03.31 வரையான காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படவிருந்த இடமாற்றங்களே இவ்வாறு ஏப்ரல் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பகிரங்க சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
