பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை இரத்து செய்ய அரசாங்கத்துக்கு எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.
எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றாவிட்டால் டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் எனவும் குறித்த கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ் விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
