வரவு செலவு திட்டம் -2026 : விசேட முன்மொழிவுகள்




2026ஆம் ஆண்டுக்கான விசேட வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் பின்வருமாறு,


வரவு செலவு திட்டம் -2026 : அரசாங்கம் விரைவில் மின்னணு கொள்முதல் முறையை அறிமுகப்படுத்த திட்டம்


வரவு செலவு திட்டம் -2026 : 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடனை 87 சதவீதமாக பராமரிக்க நம்பிக்கை 


வரவு செலவு திட்டம் -2026 : வெளிநாட்டு கையிருப்பை இந்த வருட இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற நிலைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பு


வரவு செலவு திட்டம் -2026 :

அரச வருமானம் 16% ஆக அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பு


வரவு செலவு திட்டம் -2026 :

அரச ஊழியர்களின் சம்பளத்தை 3 கட்டங்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை 


வரவு செலவு திட்டம் -2026 : அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனைவரும் தங்களுடைய சொத்து விபரங்களை அறிவிக்கும் வகையில் புதிய டிஜிட்டல் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.


வரவு செலவு திட்டம் -2026 : அரச சொத்து முகாமைத்துவ சட்டம் 2026 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்படும்.


வரவு செலவு திட்டம் -2026 : மக்களுக்கு எதிராக யாரேனும் தவறிழைத்தால் அவர்களுக்கு சட்டத்துக்கு அமைய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்கும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது.


வரவு செலவு திட்டம் -2026 : 2029 ஆம் ஆண்டு வரையில் தேசிய அபிவிருத்தி ஏற்றுமதி திட்டம் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவிப்பு 


வரவு செலவு திட்டம் -2026 : சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்த ஒரு நிபுணர் குழு நியமிக்க திட்டம் 

 

வரவு செலவு திட்டம் -2026 :  இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதிக்குள் இலங்கை வாகன இறக்குமதிக்காக 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு 


வரவு செலவு திட்டம் -2026 : இந்த ஆண்டில் 430 மில்லியன் அமெரிக்க டொலரால் இறக்குமதி செலவீனம் அதிகரித்துள்ளது. 


வரவு செலவு திட்டம் -2026 : 2032ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்ப்பு.


வரவு செலவு திட்டம் -2026 :  2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையின் நெருக்கடிக்கு முந்தைய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு. இது முந்தைய கணிப்புகளை விட நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இருக்கும் என ஜனாதிபதி தெரிவிப்பு 


வரவு செலவு திட்டம் -2026 :  வெளிநாட்டுக் கடன் சேவை கடந்த ஆண்டை விட 760 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிப்பு


வரவு செலவு திட்டம் -2026 :  இந்த ஆண்டு பட்ஜெட் பற்றாக்குறை 5.2% ஆகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்ப்பு 


வரவு செலவு திட்டம் -2026 :  வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் வதிவிட விசா முறை அறிமுகம். 


வரவு செலவு திட்டம் -2026 :  குருநாகலிலும் காலியிலும் இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டப்பட்டன, ஆனால் அவை இப்போது கைவிடப்பட்டுள்ளன. அவற்றின் நிலுவையில் உள்ள கடன்கள் தீர்க்கப்படும், மேலும் தனியார் துறை முதலீட்டிற்காக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும்.


வரவு செலவு திட்டம் -2026 :  கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் திருத்தம்


வரவு செலவு திட்டம் -2026 : முதலீட்டு மண்டலங்களுடன் தொடர்புடைய பொருளாதார மண்டலங்களை நிர்மாணிப்பதற்காக ரூ.2,000 மில்லியன்


வரவு செலவு திட்டம் -2026 : டிஜிட்டல் பொருளாதார கவுன்சிலை உருவாக்க நடவடிக்கை - டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டுக்கு 2026 இல் 25 ஆயிரம் மில்லியன் முதலீடு


வரவு செலவு திட்டம் -2026 : 2026 மார்ச் மாதம் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகமாகும்.


வரவு செலவு திட்டம் -2026 : ஹிங்குராக்கொட, சீகிரியா மற்றும் திருகோணமலை உள்நாட்டு விமான நிலையங்களை மேம்படுத்தவும், யாழ்ப்பாண விமான நிலையத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் ரூ. 1,000 மில்லியன்


வரவு செலவு திட்டம் -2026 : அனைத்து அரசு கொடுப்பனவுகளும் டிஜிட்டல் கட்டண முறையின் கீழ் கொண்டு வரப்படும். இணையவழி கொடுப்பனவுகளுக்கு எந்த சேவை கட்டணங்களும் விதிக்கப்படாது.


வரவு செலவு திட்டம் -2026 : டிஜிட்டல் தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கான முதலீட்டு வரி 5 வருடங்களுக்கு நீக்கம்


வரவு செலவு திட்டம் -2026 : நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களை 60:40 விகிதத்திற்கு கொண்டு வர நடவடிக்கை


வரவு செலவு திட்டம் -2026 : முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக ஒரு மெய்நிகர் பொருளாதார வலயம் நிறுவப்படும்.


வரவு செலவு திட்டம் -2026 : முதலீட்டுச் சபையின் கீழ் திகன மற்றும் நுவரெலியாவில் இரண்டு தகவல் தொழில்நுட்ப வலயங்கள்


வரவு செலவு திட்டம் -2026 : குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் குழந்தைகளுக்கான Broadband internet வவுச்சர்

அட்டைகள்.


வரவு செலவு திட்டம் -2026 : திறந்தவெளி சிறைச்சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் கைதிகளை சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட சிறைச்சாலை நடவடிக்கைகளை விரைவுபடுத்த ரூ. 2,000 மில்லியன்


வரவு செலவு திட்டம் -2026 : நாடு முழுவதும் 100 புதிய தொலைபேசி கோபுரங்களை நிறுவ நடவடிக்கை


வரவு செலவு திட்டம் -2026 : மஹாபொல புலமைப்பரிசில் ரூ.2,500 ஆல் அதிகரிக்கப்படும்.


வரவு செலவு திட்டம் -2026 : அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சதவீதம் ஒதுக்கீடு


வரவு செலவு திட்டம் -2026 : தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக்காக ரூ. 2,000 மில்லியன்


வரவு செலவு திட்டம் -2026 : உயர்கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மஹாபொல புலமைப்பரிசிலுக்கு மேலதிகமாக மாதாந்தம் ரூ.5,000 கொடுப்பனவு


வரவு செலவு திட்டம் -2026 : செயற்கை நுண்ணறிவு சேவை நிலையங்களுக்கு ரூ.750 மில்லியன்


வரவு செலவு திட்டம் -2026 : ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும் வசதி செய்வதற்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு 250 மில்லியன் ரூபாய்


வரவு செலவு திட்டம் -2026 : ஓட்டிசம் உட்பட, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு நிலையங்களை நிறுவ  ரூ. 500 மில்லியன்.


வரவு செலவு திட்டம் -2026 :தொழிற்பயிற்சி நிலையங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 8,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


வரவு செலவு திட்டம் -2026 : அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களுக்கு ரூ.11,000 மில்லியன்.


வரவு செலவு திட்டம் -2026 : 82 ஆரம்ப சுகாதார நிலையங்களை 5 வருடங்களில் புதுப்பிப்பதற்காக 31,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


வரவு செலவு திட்டம் -2026 : தேசிய இருதய பிரிவை உருவாக்குவதற்கு 12,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


வரவு செலவு திட்டம் -2026 : சுவசெரிய சேவைக்காக 4.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


வரவு செலவு திட்டம் -2026 : கொழும்பில் தேசிய இருதய வைத்தியசாலையை நிறுவுவதற்கான ஆரம்ப பணிகளுக்காக ரூ. 200 மில்லியன்.


வரவு செலவு திட்டம் -2026 : தம்புள்ளை மற்றும் தெனியாய பிரதேசங்களில் தேசிய மருத்துவமனை தங்குமிடங்களை அமைப்பதற்கு 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


வரவு செலவு திட்டம் -2026 : மக்கள் மேம்பாட்டு செயற்பாடுகளுக்காக 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


வரவு செலவு திட்டம் -2026 : பெருந்தோட்ட மக்களுக்கான அடிப்படை வேதனம் 2026 ஆம் ஆண்டு முதல் 1550 ரூபாய் வரை அதிகரிக்கப்படும். அதற்கு மேலதிகமாக அரசாங்கத்தினால் வருகை கொடுப்பனவாக 200 ரூபாய் வழங்கப்படும். அதற்கமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கான வேதனம் 1750 ரூபாயாக அதிகரிப்படவுள்ளது.


வரவு செலவு திட்டம் -2026 : சமூக விஞ்ஞான மற்றும் சுகாதார கணக்கெடுப்புக்கு ரூ. 570 மில்லியன்.


வரவு செலவு திட்டம் -2026 : பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் 2042 ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ளது. அனைத்து நிறுவனங்களும் முறையாக அபிவிருத்தி செய்து, வருமானத்தை அதிகரித்து, பெருந்தோட்ட மக்களுக்கு முறையான கொடுப்பனவை வழங்காவிடத்து, அவை அரசாங்கத்தினால் மீளப்பெறப்படும். 2042 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவொரு நிறுவனத்தின் ஒப்பந்தமும் நீடிக்கப்படாது.


வரவு செலவு திட்டம் -2026 : கிராமிய பாதைகள் மறுசீரமைப்புக்காக 24,000 மில்லியன் ரூபாயும் கிராமிய பாலங்களுக்காக 2,500 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு.


வரவு செலவு திட்டம் -2026 : பெண் வியாபாரிகளை மேம்படுத்துவதற்காக 240 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


வரவு செலவு திட்டம் -2026 : வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு நிவாரண வட்டியுடன் வீட்டுக்கடன் வழங்கப்படும்.


வரவு செலவு திட்டம் -2026 : மனித யானை மோதலை கட்டுப்படுத்துவதற்கு விசேட பயிற்சியுடன் 5000 சிவில் அதிகாரிகள் நியமனம்.


வரவு செலவு திட்டம் -2026 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீடுகளுக்கு பத்து மில்லியன் ரூபாய்.


வரவு செலவு திட்டம் -2026 : நாடகம், சினிமா துறையை மேம்படுத்துவதற்கு 50 மில்லியன் ரூபாய்.


வரவு செலவு திட்டம் -2026 : சர்வதேச போட்டிகள் தொடர்பாக வீர வீராங்கனைகளை தயார்ப்படுத்துவதற்கு 1,163 மில்லியன் ரூபாய்.


வரவு செலவு திட்டம் -2026 : வெங்காயம், கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்காக களஞ்சியசாலைகளை மேம்படுத்துவதற்கு 1000 மில்லியன் ரூபாய்.


வரவு செலவு திட்டம் -2026 : 2030 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு பால் தேவையில் 75 சதவீதத்தை பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு உள்ளிட்ட ஆரம்ப பணிகளுக்காக ரூபாய் 1,000 மில்லியன்.


வரவு செலவு திட்டம் -2026 : பெண்களின் நலனோம்புகையை நோக்கமாக கொண்ட நிகழ்ச்சித் திட்டத்திற்காக மேலதிகமாக 200 மில்லியன் ரூபாய்.


வரவு செலவு திட்டம் -2026 : அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட 400 நீர்ப்பாசன முறைமைகளுக்கு நடுத்தர கால வரவு செலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் ரூபா 4,000 மில்லியனை வழங்கவும், அதில் 100 நீர்ப்பாசன முறைமைகளை 2026 ஆண்டில் அமுல்படுத்துவதற்காக ரூபா 1,000 மில்லியன்.


வரவு செலவு திட்டம் -2026 : தம்புள்ளை குளிரூட்டல் களஞ்சியசாலையை, விவசாய பொருட்களுக்கான களஞ்சியமாகத் திறம்பட பயன்படுத்த சூரிய சக்தி மின் முறைமையினை நிறுவ 250 மில்லியனை ஒதுக்கீடு.


வரவு செலவு திட்டம் -2026 : சீன உதவியுடன் கட்டப்படும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கு வீடுகள்.


வரவு செலவு திட்டம் -2026 : விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ. 800 மில்லியன்.


வரவு செலவு திட்டம் -2026 : யாழ்ப்பாண தென்னை முக்கோணத்திற்கு ரூ.600 மில்லியன்.


வரவு செலவு திட்டம் -2026 : பேருவளை, அம்பலாங்கொடை, குடாவெல்ல, நில்வெல்ல உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தல் என்பவற்றுக்காக ரூபாய் 300 மில்லியன்.


வரவு செலவு திட்டம் -2026 : மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்காக, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக 1,000 மில்லியன் ரூபாய்.


வரவு செலவு திட்டம் -2026 : வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


வரவு செலவு திட்டம் -2026 : மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மீனவர்களுக்கு உயிர்ப்பாதுகாப்பு அங்கிகளை பெற்றுக் கொடுப்பதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.


வரவு செலவு திட்டம் -2026 : மீனவ சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 500 மில்லியன் ரூபாய்.


வரவு செலவு திட்டம் -2026 : மீன்கள் நடமாடும் இடங்களை இனங்காண்பதற்காகவும் உரிய தகவல்களை மீனவர்களுக்கிடையில் வினைத்திறனுடன் தொடர்பாடல் மேற்கொள்ளும் முறையொன்றை வகுப்பதற்காகவும் 100 மில்லியன் ரூபாய்.


வரவு செலவு திட்டம் -2026 : நீர்ப்பாசனத்துறையை மேம்படுத்துவதற்காக 91,700 மில்லியன் ஒதுக்கீடு.


வரவு செலவு திட்டம் -2026 : முந்தெனி ஆறு கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு 50 மில்லியன் ரூபாய்.


வரவு செலவு திட்டம் -2026 : வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஹல மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக 5,000 மில்லியன் ரூபாய்.


வரவு செலவு திட்டம் -2026 : கல்ஓயா, இராஜாங்கனை ஓயா, ஹுறுலு வாவி, மின்னேரியா வாவி உள்ளிட்ட வாவிகள் மற்றும் அணைக்கட்டுகளின் புனரமைப்பு பணிகளுக்காக ரூபா 6,500 மில்லியன்.


வரவு செலவு திட்டம் -2026 : தொடர் முறைமையை மேம்படுத்துதல் மற்றும் ஏனைய புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ரூபாய் 8,350 மில்லியன்.


வரவு செலவு திட்டம் -2026 : நகர வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்கு நிலைபேறான தீர்வொன்றுக்காக 250 மில்லியன் ரூபாய்.


வரவு செலவு திட்டம் -2026 : ஜிங்கங்கை மற்றும் களுகங்கை ஆகிய நதிகளின் வெள்ளப்பெருக்கை முகாமை செய்வது தொடர்பாக முறையான சாத்தியவள ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக 500 மில்லியன் ரூபாய்.


வரவு செலவு திட்டம் -2026 : வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் விவசாயம் செய்வதற்கு முடியாமல் போன வயல்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக 1,200 மில்லியன் ரூபாய்.


வரவு செலவு திட்டம் -2026 :307 SLTB பேருந்துகளின் தேய்ந்த எஞ்சின் அலகுகளை மாற்றுவதற்கு அடுத்த ஆண்டு ரூ. 2,062 மில்லியன்.


வரவு செலவு திட்டம் -2026 : வெள்ள அச்சுறுத்தல்களுக்கு குறுகிய கால தீர்வுகளைக் கண்டறிய ரூ. 250 மில்லியன்.மேலும் வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக ரூ. 500 மில்லியன்.


வரவு செலவு திட்டம் -2026 : மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெரவிலிருந்து கலகெதர வரையிலான பொதுஹெர-ரம்புக்கன பிரிவின் கட்டுமானப் பணிகள் 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறைவடைய திட்டம்.இதற்காக ரூ. 10,500 மில்லியன்.


வரவு செலவு திட்டம் -2026 : பொத்துஹெரவிலிருந்து கலகெதர வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கான ரூ. 10,500 மில்லியன் உட்பட, வீதி மேம்பாட்டுக்காக ரூ. 34,200 மில்லியன்


வரவு செலவு திட்டம் -2026 :ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை (கஹதுடுவ முதல் இங்கிரிய வரை) கட்டுமானப் பணிகள் - நிலம் கையகப்படுத்தல் மற்றும் மறு மதிப்பீட்டிற்காக ரூ. 1,500 மில்லியன்


வரவு செலவு திட்டம் -2026 :நுகர்வோருக்கு சாதகமான விலைகளை உறுதி செய்வதற்காக, அரசு கொள்முதல்களுக்கு போட்டி ஏல முறை அறிமுகம்




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்