பெலவத்தை அலுவலகத்தில் NPP மற்றும் JVP முக்கிய கூட்டங்கள் மாத்திரமே இடம்பெறுகின்றன. எதிர்க்கட்சிகள் அதனை மிகைப்படுத்திக் கூறுவதாக டில்வின் சில்வா தெரிவித்தார்.
அரசாங்கம் என்பது NPP யாகும். அந்த அரசாங்கத்துக்கு முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பங்களிக்கவும், உத்திகளைத் தயாரிக்கவும், நடவடிக்கைகளை எடுக்கவும் எமக்கு இடமும் தேவையும் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் வழிநடத்தல் குழு பெலவத்தையிலேயே தொடர்ந்தும் கூடுகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழுவும் பெலவத்தையிலேயே கூடுகிறது.
நானும் அங்கிருக்கின்றேன். நாம் குறைபாடுகளைப் பற்றியும் கலந்துரையாடுகின்றோம். எதிர்காலத்தில் செய்ய வேண்டிய விடயங்கள் பற்றியும் பேசுகின்றோம். பல யோசனைகள் முன்வைக்கப்படுவதோடு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான இணக்கப்பாடுகளும் எட்டப்படுகின்றன.
அரசாங்கத்தை செயற்படுத்துவதில் பெலவத்தையும் தொடர்புபட்டுள்ளது. பெலவத்தை என்ற கட்டடம் தொடர்புபடவில்லை. இரு கட்சிகளும் அங்கு கூடுவதால் அந்த இடம் அரசாங்கத்துடன் தொடர்புபட்டுள்ளது. எனினும் பெலவத்தையில் தனிநபர் ஒருவர் கைகளில் கைத்தொலைபேசியை வைத்துக் கொண்டு அரசாங்கத்தை வழிநடத்துவதாகக் கூறுவது மிகைப்படுத்தலாகும்.