இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இராணுவத்தினருக்கும் இடையிலான நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பான உடன்படிக்கை எகிப்தின் Sharm El-Sheikh நகரத்தில் இன்று கைச்சாத்திடப்பட்டது.
நெதன்யாஹூ பிரசன்னமாகி இருக்காத இந்த நிகழ்வில் இஸ்ரேல் சார்பாக டொனால்ட் ட்ரம்பும், ஹமாஸ் சார்பாக எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் சிசி அவர்களும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
காஸா அமைதி ஒப்பந்தத்தின் கைச்சாத்து நிகழ்விற்கு...
🔴 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
🔴 பலஸ்தீனிய அதிகார சபை தலைவர் மஹ்மூத் அப்பாஸ்.
🔴 கட்டார் எமிர் ஷேக் தமிம் பின் ஹமாட் அல்தானி.
🔴 துருக்கி ஜனாதிபதி தையப் அர்துகான்.
🔴 பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மேக்ரான்.
🔴 இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
🔴 ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சஞ்சேஸ்.
🔴 இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி.
🔴 ஜெர்மன் சான்ஸெலர் ப்ரெட்ரிச் மெர்ஸ்.
🔴 ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அன்டோனியோ கோஸ்டா.
🔴 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ்.
🔴 அரப் லீக்கின் செயலாளர் ஜெனரல் அஹமத் அப்துல் கெய்த்.
🔴 ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா.
🔴 பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் ஈஸா அல் கலீபா.
🔴 குவைத் எமிர் ஷெய்க் மெஷால் அல் அஹமட் அல் ஜாபர் அல் சபாஹ்.
🔴 ஈராக் பிரதமர் முஹம்மட் ஷியா அல் சுதானி.
🔴 இந்தோனேஷிய ஜனாதிபதி பிரபாவோ சுபியான்டோ.
🔴 அஸர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ்.
🔴 கிரீஸ் பிரதமர் ரியாகோஸ் மிட்ஸோடாகிஸ்.
🔴 ஆர்மேனிய பிரதமர் நிகோல் பசின்யன்.
🔴 ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன்.
🔴 பாகிஸ்தான் பிரதமர் ஷெஃபாஸ் ஷரீப்.
🔴 கனேடிய பிரதமர் மார்க் கார்னே.
🔴 நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார்.
🔴 சைப்ரஸ் ஜனாதிபதி நிகோஸ் கிரிஸ்டோ டோலிட்ஸ்.
🔴 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் ஷேக் முஹம்மட் பின் ரஷீத் அல் மக்தூம்.
🔴 இந்திய வெளிவிவகார அமைச்சகம்.
🔴 ஓமான் வெளிவிவகார அமைச்சகம்.
🔴 எகிப்துக்கான ஜப்பானிய தூதுவர்.
ஆகிய வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்.