போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்

 

அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க ஜனாதிபதி ட்ரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

 

இதில் கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்திய வெனிசுலா நாட்டு படகுகள் மீது அமெரிக்கா இராணுவம் நடத்திய தாக்குதலில் 5 படகுகளில் உள்ள 27 பேர் கொல்லப்பட்டனர்.

 

இந்த நிலையில் அமெரிக்காவை நோக்கி போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பல் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.

 

இதுதொடர்பாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தும் நீர்மூழ்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டது.


இந்தக் கப்பலில் பெரும்பாலும் பென்டானைல் மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொருட்கள் நிறைந்திருந்ததாக அமெரிக்க உளவுத்துறை உறுதிப்படுத்தியது.


மேலும் அதில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 4 பேர் இருந்தனர். இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். மற்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்குத் தொடரப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளான ஈக்வடார் ,கொலம்பியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் கரைக்கு வந்திருந்தால் அதில் உள்ள போதைப் பொருள் மூலம் சுமார் 25 ஆயிரம் அமெரிக்கர்கள் இறந்திருப்பார்கள்.


இந்தத் தாக்குதலில் எந்த அமெரிக்கப் படைகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எனது கண்காணிப் பின் கீழ் நிலம் அல்லது கடல் வழியாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தும் பயங்கரவாதிகளை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது" என்று தெரிவித்துள்ளார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்