20 வருடங்களுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனம் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க புதன்கிழமை (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஓட்டுநர்உரிமத்தை அச்சிடுவதற்கு தனியார் நிறுவனம் ரூ.534.54 செலவாகும் என்றும், அதே நேரத்தில் RMV மூலம்ரூ. 367 செலவில் ஒன்றை அச்சிடமுடியும்.
"மோட்டார் வாகனப் பதிவு துறை (RMV) மூலம் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவது என்று நாங்கள் முடிவுசெய்துள்ளோம். அதற்காக அச்சிடும் இயந்திரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன" என்று அமைச்சர் தெரிவித்தார்.