(எஸ்.எம்.அறூஸ்)
கொச்சிக்காய்ச்சேனை விவசாய அமைப்பினர், வயல்வெளியில் உள்ள வாய்க்கால்களை அகழ்ந்து துப்பரவு செய்வதற்காக, அக்கரைப்பற்றில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான Excavator இயந்திரத்தை மூன்று நாட்களாக இலவசமாக பெற்று வேலைகளை செய்து வந்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் வேலை ஆரம்பிக்கும் போது 41 லீற்றர் எரிபொருள் விவசாய அமைப்பினரால் வழங்கப்பட்டும், வேலை முடிவடைந்து செல்லும் போது, மேலதிக எரிபொருள் செலவு எனக்கூறி Excavator சாரதி 13,000.00 ரூபா பணத்தை குறித்த விவசாய அமைப்பிடமிருந்து பெற்று வந்துள்ளார்.
மூன்றாவது நாளான இன்றைய தினமும் வேலை முடிந்து செல்லும் போது 13,000.00 ரூபா பணத்தை பெறும் போது சாரதியும் நீர்ப்பாசன திணைக்கள காரியாலய உதவியாளரும் இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பானமையைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.