உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மேலதிக கலந்துரையாடலுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் ஹங்கேரியாவில் இன்று சந்திக்கவுள்ளனர்.
இரு நாட்டு தலைவர்களும் இடையில் நேற்று (16) தொலைபேசியில் உரையாடல் இடம்பெற்றுள்ள நிலையில், இதன்போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான உயர்மட்ட ஆலோசகர்கள் குழு அடுத்த வாரம் ரஷ்ய அதிகாரிகளை சந்திக்க உள்ளதுடன், இதன்போது இரு ஜனாதிபதிகளின் சந்திப்பின் திகதி குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
டிரம்ப் - புடின் சந்திப்பு ஹங்கேரியாவின் நகரமான புடாபெஸ்டில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி டிரம்ப் இன்று (17) வெஷிங்டன் டிசியில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்கவுள்ள பின்னணியில் இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.