குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து நீதிமன்றத்துக்கு என்னை அனுப்பிய இறுதி நாளன்று நான் சி.ஐ.டியின் அப்போதைய பணிப்பாளரிடம் (சானி அபேசேகரவிடம்) சென்று 'சேர் சிறைச்சாலையில் 3 அல்லது 2 சிறைகூடுகளில் உள்ளவர்களின் பயன்பாட்டுக்கு 2 கழிப்பறைகளே உள்ளன. அவற்றை புனரமைக்க எனக்கு வாய்ப்பளியுங்கள்' என்று குறிப்பிட்டேன். 'இது சிறந்த யோசனை, நீங்கள் விடுதலையானால் இந்த யோசனையை பொலிஸ்மா அதிபருக்கு அறிவியுங்கள். அப்போது நான் இந்த பதவியில் இருந்தால், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவேன்' என்று சானி அபேசேகர குறிப்பிட்டார்.