இஷாரா செவ்வந்திக்கு உதவி செய்தனர் எனக் கூறப்படும் 7 சந்தேகநபர்கள் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்த பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஷாராவின் வாக்குமூலம்
பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த கிளிநொச்சி பிரதேசத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையிலேயே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.